Homeசெய்திகள்சினிமாமாஸ் காட்டும் ரஜினி..... ஏமாற்றத்தில் ரசிகர்கள்.... 'வேட்டையன்' படத்தின் திரைவிமர்சனம்!

மாஸ் காட்டும் ரஜினி….. ஏமாற்றத்தில் ரசிகர்கள்…. ‘வேட்டையன்’ படத்தின் திரைவிமர்சனம்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினி நடிப்பில் உருவாகி இருந்த வேட்டையன் திரைப்படம் இன்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருந்த இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துதான் என்பதை விமர்சனமாக பார்ப்போம்.மாஸ் காட்டும் ரஜினி..... ஏமாற்றத்தில் ரசிகர்கள்.... 'வேட்டையன்' படத்தின் திரைவிமர்சனம்!

திரை விமர்சனம்

ரஜினி இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக எஸ் பி அதியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு மனைவியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். ஊரில் எங்கு தப்பு நடந்தாலும் அதை விசாரித்து குற்றவாளிகளை என்கவுண்டர் செய்கிறார் ரஜினி. ஆனால் அவர் செய்யும் ஒரு என்கவுண்டர் தான் பூகம்பமாக வெடிக்கிறது.மாஸ் காட்டும் ரஜினி..... ஏமாற்றத்தில் ரசிகர்கள்.... 'வேட்டையன்' படத்தின் திரைவிமர்சனம்!

அதாவது அரசு பள்ளி ஆசிரியையான துஷாரா விஜயன் இந்த படத்தில் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் காவல்துறையிடம் புகார் ஒன்றை கொடுக்க வருவதன் மூலம் ரஜினிக்கு அறிமுகமாகிறார். அந்த சமயத்தில் துஷாரா விஜயினை கொலை செய்து விடுகின்றனர்.மாஸ் காட்டும் ரஜினி..... ஏமாற்றத்தில் ரசிகர்கள்.... 'வேட்டையன்' படத்தின் திரைவிமர்சனம்! எனவே கொலை செய்ததாக சொல்லி ஒருவனை என்கவுண்டர் செய்து விடுகிறார் ரஜினி. ஆனால் ரஜினி ஒரு நிரபராதியை கொன்றுவிட்டதாக அமிதாப் பச்சன் கூறுகிறார். அப்போது துஷாரா விஜயனை கொன்றது யார் என்று தேடுதல் வேட்டை நடத்துகிறார் ரஜினி. இதன் பிறகுதான் படத்தின் சுவாரசியம் தொடங்குகிறது. 73 வயதிலும் நடிகர் ரஜினி மாஸாக நடித்து தூள் கிளப்பியுள்ளார்.மாஸ் காட்டும் ரஜினி..... ஏமாற்றத்தில் ரசிகர்கள்.... 'வேட்டையன்' படத்தின் திரைவிமர்சனம்! மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் ஒரே ஒரு காட்சியில் தூள் கிளப்பி இருக்கிறார். பகத் பாசிலின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ராணாவின் கதாபாத்திரம் வலுவாக அமைக்கப்படவில்லை. அமிதாப் பச்சன் தனது நடிப்பை நேர்த்தியாக தந்திருந்தாலும் ரஜினிக்கும் அவருக்குமான காட்சிகள் கனெக்ட் ஆகவில்லை. கிளைமாக்ஸில் கலங்க வைத்துள்ளனர். மாஸ் காட்டும் ரஜினி..... ஏமாற்றத்தில் ரசிகர்கள்.... 'வேட்டையன்' படத்தின் திரைவிமர்சனம்!படத்தின் முதல் பாதி ஆக்சன் காட்சிகள் என விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் சில தொய்வுகள் சலிப்படைய வைக்கிறது. அனிருத்தின் இசை பக்கபலமாக அமைந்துள்ளது. கதிரின் ஒளிப்பதிவு படத்தினை ரியலாக காட்டி இருக்கிறது. இப்படம் ஜெய் பீம் படத்தைப் போல இல்லாமல் வேறு மாதிரியான திரைக்கதையை ரஜினிக்காக தயார் செய்து இருக்கிறார் டிஜே ஞானவேல். அதன்படி போலி என்கவுண்டர் குறித்தும் கல்வி முறையில் இருக்கும் ஓட்டைகள் குறித்தும் பேசியுள்ளார். இன்றைய தலைமுறைக்கு ஏற்ற கதையாக இருந்தாலும் ரஜினி படம் போன்ற அனுபவத்தை தான் தந்துள்ளது. ஆக மொத்தத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரஜினி ரசிகர்களாக படத்தை கண்டு ரசிக்கலாம்.

MUST READ