நடிகர் வெற்றி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
‘8 தோட்டாக்கள்‘ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வெற்றி தனது முதல் படத்திலே மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அதையடுத்து வித்தியாசமான கதைக்களம் கொண்ட ‘ஜீவி‘ படத்தின் மூலம் தமிழ் மக்கள் மனதில் அழுத்தமாக தடம் பதித்தார். பின்னர் C/O காதல், வனம், ஜோதி, ஜீவி 2, மெமரிஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது வெற்றி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இயக்குனர் அஷ்ரப் அலி இந்தப் படத்தை இயக்குகிறார். படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை ஷில்பா மஞ்சுநாத். அதையடுத்து ஹரிஷ் கல்யாண் உடன் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்‘ படத்தில் நடித்தார். அந்தப் படம் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதையடுத்து சில காலமாக படங்களில் தலைகாட்டாமல் இருந்த ஷில்பா தற்போது மீண்டும் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.