Homeசெய்திகள்சினிமா'வேட்டையன்' படத்திலிருந்து நடிகர் கிஷோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!

‘வேட்டையன்’ படத்திலிருந்து நடிகர் கிஷோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

நடிகர் கிஷோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வேட்டையன் படக்குழு வெளியிட்டுள்ளது.'வேட்டையன்' படத்திலிருந்து நடிகர் கிஷோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். ஜெய் பீம் படத்திற்கு பிறகு இவர் இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, கிஷோர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு மற்றுமொரு காரணமாகும். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதேசமயம் இந்தப் படத்தில் இருந்து மனசிலாயோ எனும் பாடலும் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. மேலும் இதன் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் கிஷோரின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் கிஷோர், ஹரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

MUST READ