spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினிக்கு வில்லனான ராணா...... கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட 'வேட்டையன்' படக்குழு!

ரஜினிக்கு வில்லனான ராணா…… கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட ‘வேட்டையன்’ படக்குழு!

-

- Advertisement -

வேட்டையன் படத்திலிருந்து ராணா டகுபதியின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி உள்ளது.ரஜினிக்கு வில்லனான ராணா...... கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட 'வேட்டையன்' படக்குழு!

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டகுபதி, தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் திரைப்படத்தில் அஜித்துக்கு நண்பனாக நடித்திருந்தார். அதே சமயம் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்து இந்திய அளவில் பிரபலமானார். அதேசமயம் இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.ரஜினிக்கு வில்லனான ராணா...... கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட 'வேட்டையன்' படக்குழு! இந்த படத்தினை ஜெய் பீம் படத்தில் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரக்சன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். அந்த படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் இந்த தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்தது வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.

we-r-hiring

இதற்கிடையில் படத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் ராணாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இவர் நடராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று ஏற்கனவே சமூக வலைதளங்களை செய்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ