கூலி படத்தின் படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் லீக்கானது.
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ரஜினியின் 172வது படமாக உருவாகி வரும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதிலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
#COOLIE : #Nagarjuna Scenes Leaked🔥
This is Gonna Be Bigger This Time🥶#Rajinikanth | #LokeshKanagaraj pic.twitter.com/z9akfvcNOS
— Taffyy (@MenInBlack67) September 18, 2024
படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்த தகவல் படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் நடிகர் நாகார்ஜுனாவின் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் நடிகர் நாகார்ஜுனா கூலி திரைப்படத்தில் வில்லனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது.