Homeசெய்திகள்சினிமாஅஜித் பிறந்தநாளில் வெளியாகும் 'விடாமுயற்சி' அப்டேட்.... வெளியான புதிய தகவல்!

அஜித் பிறந்தநாளில் வெளியாகும் ‘விடாமுயற்சி’ அப்டேட்…. வெளியான புதிய தகவல்!

-

நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது 62 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அஜித் பிறந்தநாளில் வெளியாகும் 'விடாமுயற்சி' அப்டேட்.... வெளியான புதிய தகவல்!லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை சுபாஸ்கரன் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரவ் மற்றொரு வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அஜர்பைஜானில் படப்பிடிப்புகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. இருப்பினும் படப்பிடிப்பு 50 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் படத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.அஜித் பிறந்தநாளில் வெளியாகும் 'விடாமுயற்சி' அப்டேட்.... வெளியான புதிய தகவல்!இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ரசிகர்கள் பலரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி வருகின்ற மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவும் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பை பட குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ