spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் மன்சூர் அலிகான் உடல் நிலையில் முன்னேற்றம்!

நடிகர் மன்சூர் அலிகான் உடல் நிலையில் முன்னேற்றம்!

-

- Advertisement -

நடிகர் மன்சூர் அலிகான் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர் மன்சூர் அலிகான் உடல் நிலையில் முன்னேற்றம்!

நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் சினிமாவில் 1990 கால கட்டங்களில் இருந்து தனது திரை பயணத்தை தொடங்கியவர். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார். அதே சமயம் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். சமீபகாலமாக நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் மன்சூர் அலிகான். இவர் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் மன்சூர் அலிகான் நடிப்பில் சரக்கு எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் மன்சூர் அலிகான். நடிகர் மன்சூர் அலிகான் உடல் நிலையில் முன்னேற்றம்! இதற்கிடையில் மன்சூர் அலிகான் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். அந்த வகையில் திரிஷா குறித்து அவதூறாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மன்சூர் அலிகான் அரசியலிலும் ஆர்வம் உடையவராக இருக்கும் பட்சத்தில் நேற்று குடியாத்தத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மன்சூர் அலிகானுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நடிகர் மன்சூர் அலிகான் உடல் நிலையில் முன்னேற்றம்!தொடர்ந்து அவருக்கு ஐசியு வில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வரும் நிலையில் மன்சூர் அலிகான் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரது உடல்நிலை சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ