spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிதார்த் நடித்திருக்கும் லாந்தர்... வெளியானது டிரைலர்...

விதார்த் நடித்திருக்கும் லாந்தர்… வெளியானது டிரைலர்…

-

- Advertisement -
விதார்த் நடித்திருக்கும் லாந்தர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விதார்த் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அந்த வகையில் மைனா, குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அண்மையில் இவரது நடிப்பில் இறுகப்பற்று திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி ஆகியோருடன் இணைந்து நடித்திருப்பார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.

we-r-hiring
இவர் சரத்குமாருடன் இணைந்து ‘சமரன்’ எனும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை எம் 360 டிகிரி ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் திருமலை பாலுச்சாமி இயக்குகிறார். இதைத் தொடர்ந்து, லாந்தர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ராட்சசன் பட இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சாஜி சலீம் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

படத்தில் விதார்த்துடன் ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எம்.எஸ். பிரவீன்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இந்நிலையில், லாந்தர் திரைப்படத்தின் புதிய டிரைலர் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகிறது. நாளை மறுநாள் ஜூன் 21-ம் தேதி லாந்தர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ