Homeசெய்திகள்சினிமா'விடுதலை 2' படத்திலிருந்து 'பொறுத்தது போதும்' பாடல் இணையத்தில் வெளியீடு!

‘விடுதலை 2’ படத்திலிருந்து ‘பொறுத்தது போதும்’ பாடல் இணையத்தில் வெளியீடு!

-

- Advertisement -

விடுதலை 2 படத்திலிருந்து பொறுத்தது போதும் எனும் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விடுதலை 2. 'விடுதலை 2' படத்திலிருந்து 'பொறுத்தது போதும்' பாடல் இணையத்தில் வெளியீடு!இந்த படமானது வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தியது. ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகமும் அதேபோன்று மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ரசிகர்கள் பலரும் படத்தை திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது இந்த படத்திலிருந்து பொறுத்தது போதும் எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை பி யோகி பாடி இருக்கும் நிலையில் யுக பாரதி இந்த பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.

 

மேலும் இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தினை ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனமும் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இளையராஜா இதற்கு இசை அமைக்க வேல்ராஜ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ