Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறனின் விடுதலை இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

வெற்றிமாறனின் விடுதலை இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

-

வெற்றிமாறனின் விடுதலை இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 1. இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

ஆர் எஸ் இன்ஃபோடர்மன்ட் தயாரித்திருந்த இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்ட இத் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

சமீபத்தில் சூரி, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி இன்று விடுதலை படத்தின் இரண்டாம் காகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் நடைபெற்று வருவதாகவும்,
சூரி மற்றும் விஜய் சேதுபதியின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படப்பிடிப்புகள் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் எனவும் விடுதலை இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ