Homeசெய்திகள்சினிமாஎன் ஹீரோ, என் கேப்டன், என் ரோல் மாடல்...... தோனி குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட...

என் ஹீரோ, என் கேப்டன், என் ரோல் மாடல்…… தோனி குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!

-

பிரபல கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மகேந்திர சிங் தோனி அவர்கள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.  கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.இவர் ரசிகர்களால் தல தோனி என்று செல்லமாக அழைக்கப்படுபவர். ரசிகர்களும் தோனி மீதான அன்பில் தோனியை தன் வீட்டில் ஒருவராக நினைத்து இவரின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுவார்கள். மேலும் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனானதில் இருந்து தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாகவே மாறிவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள எல் ஜி எம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு தன்னை தத்தெடுத்துள்ளதாகவும் தமிழ் மக்கள் தன் மீது காட்டும் அன்பும், அரவணைப்பும், பாசமும் நம்ப முடியாத ஒன்று என தனது அன்பினை பகிர்ந்துள்ளார்.

எல் ஜி எம் படத்தினை தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திரையுலகில் மிக நெருங்கிய நண்பரான விக்னேஷ் சிவனை மகேந்திர சிங் தோனி நேரில் சந்தித்துள்ளார். அச்சமயம் விக்னேஷ் சிவனின் டி-ஷர்ட்டில் தோனி கையொப்பமிட்டுள்ளார். அப்போது விக்னேஷ் இவனும் தோனியின் கையைப் பிடித்து முத்தமிட்டுள்ளார்.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் ஹீரோ, என் கேப்டன் ரோல் மாடலுடன் இருப்பது மிகவும் உணர்ச்சிபூர்வமானது. நான் மிகவும் விரும்பி தினமும் பார்க்கும் ஒருவர். அவரின் முகத்தில் சிரிப்பை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. படங்களை தயாரிப்பதற்கு அவர் தமிழ் திரையுலகை தேர்ந்தெடுத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. திரையரங்குகளில் அவர் தயாரித்த படத்தை பார்த்து அன்பையும் ஆதரவையும் அளிப்பதற்கு தயாராக இருக்கிறோம். சாக்சி மேடமிற்கு நன்றி தமிழ் சினிமாவிற்கு உங்களை வரவேற்கிறோம்.
எல்ஜி படம் வெற்றி பெறுவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் விக்னேஷ் சிவன்,தோனி தயாரிப்பில் புதிய படம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ