Homeசெய்திகள்சினிமாநண்பன் படத்தை அடுத்து மீண்டும் இணையும் விஜய், சங்கர் கூட்டணி!

நண்பன் படத்தை அடுத்து மீண்டும் இணையும் விஜய், சங்கர் கூட்டணி!

-

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் தற்போது தனது 67வது படமான லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. அதனால் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய்தத், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகளை விஜய் நிறைவு செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விஜயின் 69 வது படத்தை இயக்குனர் அட்லீ இயக்குவார் என்று ஏற்கனவே சில தகவல்கள் கசிந்திருந்தன.
இந்நிலையில் விஜயின் 70வது படத்தை இயக்குனர் சங்கர் இயக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
விஜய் மற்றும் சங்கர் கூட்டணி ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டில் வெளியான நண்பன் படத்தில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் ஒரு அரசியல் திரில்லர் கதை களத்தில் உருவாக இருப்பதாகவும், இந்த கதையை இயக்குனர் சங்கர் விஜயிடம் ஒன்லைனில் குறி ஒப்பந்தம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.எனினும் இது சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

MUST READ