spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'மீராவுடன் நானும் இறந்து விட்டேன்'..... விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு!

‘மீராவுடன் நானும் இறந்து விட்டேன்’….. விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு!

-

- Advertisement -

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் 16 வயதேயான மீரா நீண்ட நாட்களாக மன அழுத்தத்தால் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது மகளின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

அதன்படி தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு நெஞ்சங்களை,
என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகத்தை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வழி, வறுமை, வன்மம், இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள்” என்று உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

MUST READ