spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'பராசக்தி' தலைப்பை விட்டுக் கொடுத்ததற்கு இதுதான் காரணம்.... விஜய் ஆண்டனி!

‘பராசக்தி’ தலைப்பை விட்டுக் கொடுத்ததற்கு இதுதான் காரணம்…. விஜய் ஆண்டனி!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. 'பராசக்தி' தலைப்பை விட்டுக் கொடுத்ததற்கு இதுதான் காரணம்.... விஜய் ஆண்டனி!இவரது நடிப்பில் வள்ளி மயில், சக்தித் திருமகன், மார்கன் ஆகிய படங்கள் உருவாகியிருக்கின்றன. அதில் மார்கன் திரைப்படம் வருகின்ற ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பின்போது, விஜய் ஆண்டனியிடம் பராசக்தி டைட்டில் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் அறிவித்த நாளன்று, விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.'பராசக்தி' தலைப்பை விட்டுக் கொடுத்ததற்கு இதுதான் காரணம்.... விஜய் ஆண்டனி! அதன் பிறகு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இதற்கு சுமூகமான தீர்வு எட்டப்பட்டது. அதில் விஜய் ஆண்டனி, பராசக்தி டைட்டிலை சிவகார்த்திகேயனுக்கு விட்டுக்கொடுத்தார். அந்த சமயத்தில் இந்த விஷயம் பெரிய அளவில் பேசப்பட்டதோடு விஜய் ஆண்டனிக்கு பாராட்டுகளும் குவிந்தன. இந்நிலையில்தான் இது தொடர்பான கேள்விக்கு விஜய் ஆண்டனி, “படத்தின் டைட்டில் பிரச்சனை என்பது எனக்கு ஒரு முறை தான் நடந்திருக்கிறது. அது தெரியாமல் நடந்த ஒரு விஷயம். அந்த டைட்டிலை நான் பதிவு செய்து வைத்திருந்தேன் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. 'பராசக்தி' தலைப்பை விட்டுக் கொடுத்ததற்கு இதுதான் காரணம்.... விஜய் ஆண்டனி!திரைத்துறையில் டைட்டில்களை பதிவு செய்ய இரண்டு, மூன்று யூனியன்கள் இருக்கிறது. இந்த விஷயம் எதார்த்தமாக நடந்தது. அவர்கள் தரப்பில் அந்த டைட்டிலை அறிவித்துவிட்டார்கள். ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. அதுமட்டுமின்றி தயாரிப்பாளரின் வலியும், வேதனையும் எனக்கு புரியும். அதனால்தான் அவர்களுக்காக அந்த டைட்டிலை விட்டுக் கொடுத்து விட்டேன். இது போன்ற பிரச்சனைகள் வருவது இயல்பானது தான்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ