விஜய் ஆண்டனி நடிக்கும் மார்கன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே வள்ளிமயில், சக்தித் திருமகன் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர மார்கன் எனும் திரைப்படத்திலும் நடித்த முடித்துள்ளார். இந்தப் படத்தை அட்டகத்தி, இன்று நேற்று நாளை, பீட்சா, சூது கவ்வும் ஆகிய படங்களில் எடிட்டர் ஆக பணியாற்றிய லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து அஜய் திஷன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை விஜய் ஆண்டனி தனது விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு இன்று (மே 14) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு ககன மார்கன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது என்பதும் தற்போது இதன் தலைப்பு மார்கன் என்று மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.