விஜய் ஆண்டனி நடிக்கும் மார்கன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதை தொடர்ந்து இவர் டிஷ்யூம், நினைத்தாலே இனிக்கும், காதலில் விழுந்தேன் என பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதே சமயம் நடிப்பதிலும் ஆர்வமடைய இவர் நான், சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வரும் இவர், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே வள்ளி மயில், சக்தித் திருமகன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர மார்கன் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்திற்கு ஆரம்பத்தில் ககன மார்கன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் மார்கன் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தை லியோ ஜான்பால் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியே இந்த படத்தை தயாரித்து இசையும் அமைத்துள்ளார். கிரைம் திரில்லர் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படமானது 2025 ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை (மே 21) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.