Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனி நடிக்கும் 'ரோமியோ'..... முக்கிய அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரோமியோ’….. முக்கிய அறிவிப்பு!

-

விஜய் ஆண்டனி நடிக்கும் ரோமியோ படத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஜய் ஆண்டனி நடிக்கும் 'ரோமியோ'..... முக்கிய அறிவிப்பு!

பிரபல இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் வள்ளி, ஹிட்லர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். விரைவில் இந்த படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. மேலும் விஜய் ஆண்டனி, விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிர்நாலினி ரவி நடிக்கிறார். குட் டெவில் நிறுவனத்தின் சார்பில் விஜய் ஆண்டனி தான் இப்படத்தை தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக்கை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். மேலும் இப்படம் 2024 கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கிறார். இதுவரை விஜய் ஆண்டனியை ஆக்சன் ஹீரோவாக பார்த்த ரசிகர்களுக்கு விஜய் ஆண்டனியை ரொமான்டிக் ஹீரோவாக பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.விஜய் ஆண்டனி நடிக்கும் 'ரோமியோ'..... முக்கிய அறிவிப்பு! அதேசமயம் விஜய் ஆண்டனி ரொமான்டிக் ஹீரோவாக தனது நடிப்பை எப்படி வெளிப்படுத்தி இருப்பார் என்பதை காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முக்கியமான பெரிய அறிவிப்பு இன்று (ஜனவரி 29) நண்பகல் 12.01 மணியளவில் வெளியாகும் என்று போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ