சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கடலோர மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு சென்றது. இதனால் வரலாறு காணாத கன மழை பொழிந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து, உண்ண உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நான்கு நாட்களை கடந்த நிலையிலும் சென்னை வாசிகளின் இயல்புநிலை இன்னும் பழைய நிலைமைக்கு வரவில்லை. இந்நிலையில் தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அமைச்சர்கள், திரைப்பட பிரபலங்கள் போன்ற பலரும் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து வருகின்றனர்.ஆனால் இன்றுவரையிலும் சமூக வலைதளங்களில் பல குரல்கள் உதவி கேட்டு குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தளபதி விஜய், சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே விஜய் மக்கள் இயக்கத்தினர் பொது மக்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதன்படி செங்கல்பட்டு போன்ற இடங்களில் மக்களுக்கு உணவு வழங்குவது, வெளியில் வர முடியாமல் தவிக்கும் மக்களை படகின் மூலம் மீட்டெடுப்பது போன்ற நற்பணிகளை செய்து வருகின்றனர்.
Thalapathy #VIJAY called and Spoke to #VijayMakkalIyakkam Volunteer who did flood relief work and enquired about his safety ❤️ #கைகோர்ப்போம் துயர்துடைப்போம் pic.twitter.com/04SDXiqJ3u
— Actor Vijay Fans Page (@ActorVijayFP) December 8, 2023
இதற்கு நடிகர் விஜய், பெருங்குடி பகுதியைச் சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகி ஒருவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்று விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வரும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.