விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகராக வளர்த்துள்ளார் விஜய் தேவரகொண்டா. தற்போது பான் இந்தியா அளவில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.


தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஸ்ரீ லீலா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நாக வம்சி எஸ் மற்றும் சாய் சௌஜன்யாவின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் & பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இன்று நடைபெற்ற இந்தப் படத்தின் பூஜையில் விஜய் தேவரகொண்டா, லீலா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.
இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா சமந்தா உடன் ‘குஷி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.


