நடிகர் விஜய் தேவரகொண்டா ‘ஜெர்சி’ பட இயக்குனருடன் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார்.
தெலுங்கு மட்டுமல்லாமல் பான் இந்தியா நடிகராகவும் வளர்ச்சி அடைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. தற்போது அவர் சமந்தா உடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார். சிவ நிர்வணா இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் செப்டம்பர் 1-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று விஜய் தேவரகொண்டா தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையடுத்து அவர் நடிப்பில் வெளியாக உள்ள படங்களின் அப்டேட்கள் வெளியாகின.
விஜய் தேவரகொண்டா அடுத்ததாக ‘ஜெர்ஸி’ படத்தின் இயக்குனர் கெளதம் தின்னுரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா உளவாளியாக நடிக்கிறார். படத்திற்கு ‘VD 12’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்திற்கு ம்யூசிக் சென்சேஷன் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.