தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் விருந்து படைத்தது. அதேசமயம் அஜித்தை எப்படி எல்லாம் பார்க்க நினைத்தார்களோ அப்படி எல்லாம் காட்டிய ஆதிக் ரவிச்சந்திரனையும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர் ரசிகர்கள். மேலும் இப்படம் அஜித்தின் கேரியரில் அதிக வசூலை கொடுத்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. எனவே மீண்டும் அஜித் – ஆதிக் கூட்டணி இணைய போவதாகவும் இந்த படத்தினை மைத்ரி மூவி வேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்கப் போவதாகவும் பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
அது மட்டுமில்லாமல் அஜித், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் தன்னுடைய அடுத்த படம் 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதாவது அஜித்தின் வாலி, விஜயின் குஷி ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான எஸ்.ஜே. சூர்யா, தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அதிலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார். தற்போது எஸ்.ஜே. சூர்யா அஜித்துடன் இணைந்து நடிக்க விரும்புகிறாராம். எனவே அஜித்தின் அடுத்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -