திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் அரசியலில் கால் பதிக்க தொடங்கிவிட்டார் என்று அடிக்கடி சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் சமீப காலமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்வது, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பலருக்கு உணவு வழங்குவது போன்ற நற்பணிகளை செய்து வருகின்றனர். இவ்வாறான செயல்பாடுகளினால் ரசிகர்கள் பலரும் விஜய் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளார் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஆர்கே கான்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் விஜய் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி விருது, பாராட்டு சான்றிதழ், ஊக்கு தொகை போன்றவற்றை வழங்கி வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் மாணவ மாணவர்களுக்கு படிப்பை தாண்டி நற்குணங்களும், சிந்தனை திறனும் இருக்க வேண்டும் என்று அறிவுரையும் வழங்கி வருகிறார்.

இதைத்தொடர்ந்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று மாநிலத்தின் முதல் இடத்தை பிடித்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்துள்ளார். மாணவர்களை ஊக்குவிக்கும் விதமான விஜயின் இந்த செயல் பொதுமக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.