நடிகர் விஜய் லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது The Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அந்த போஸ்டரில் விஜய் வயதான தோற்றத்திலும் இளமையான தோற்றத்திலும் காண்பிக்கப்பட்டார். அதுமட்டுமில்லாமல் சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பில், கிளீன் ஷேவ் செய்து வேற லெவல் லுக்கில் இருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்த அதே சமயத்தில் ரசிகர்களுடன் விஜய் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
#TheGOATshootingdiaries pic.twitter.com/P9t1BXhpze
— venkat prabhu (@vp_offl) January 13, 2024
இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு The Greatest Of All Time படத்தின் அப்டேட் ஏதேனும் வருமா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு அட்டகாசமான வீடியோவை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. படப்பிடிப்பில் விஜயை காண திரண்டு வந்த ஏராளமான ரசிகர்களைப் பார்க்க துள்ளி குதித்து வந்த விஜய் கையசைத்து ரசிகர்களுக்கு ரஞ்சிதமே கிஸ் பறக்க விட்டார். இது சம்பந்தமான வீடியோவுடன் The Greatest Of All Time படத்தின் பிஜிஎம் ஐ எடிட் செய்து அதனை விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. இந்த வீடியோவை பிஜிஎம் உடன் பார்க்கும்போது செம மாஸாக காணப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.