Homeசெய்திகள்சினிமாத.வெ.க கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய்..... வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

த.வெ.க கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய்….. வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தை முடித்துவிட்டு கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். அதே சமயம் வேட்டையன் திரைப்படமும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.த.வெ.க கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய்..... வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

அடுத்ததாக நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி போன்ற முழு ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். எனவே விஜயின் அரசியல் வருகைக்கு பல அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். த.வெ.க கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய்..... வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!அதே சமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, சிகப்பு மற்றும் மஞ்சள் நேரத்தில் இருபுறமும் இரண்டு போர் யானைகள் இருக்க நடுவில் வாகை பூ இடம்பெற்றிருக்கும் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார் விஜய். அத்துடன் கட்சி கொடி தொடர்பான பாடல் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்த பாடல் இணையத்தில் செம வைரலாகி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். ரஜினி.

MUST READ