Homeசெய்திகள்சினிமாவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள்.... பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள்…. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்!

-

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்கள்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள்.... பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்!நடிகர் விஜய் ஒரு பக்கம் சினிமாவில் வசூல் மன்னனாக கலக்கி வந்தாலும் இன்னொரு பக்கம் தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார். அதுமட்டுமில்லாமல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்வது, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்குவது போன்ற நலத்திட்டங்களை செய்து வந்தார்.விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள்.... பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்!

இந்நிலையில் சமீபத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சென்னை வாழ் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரங்கள் கடந்த நிலையிலும் மக்கள் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப்பட பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும்படி மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி மக்கள் இயக்க நிர்வாகிகளும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல், போன்ற மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கத்தில் மருத்துவ முகாம்கள் நடத்த மக்கள் இயக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மக்கள் இயக்கத்தின் சார்பில்
வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை உள்ளிட்ட 25 பகுதிகளில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும்
இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இது சம்பந்தமாக எந்தெந்த வார்டுகளில் முகாம்கள் நடத்தப்படும் என்பதை அறிக்கைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.

MUST READ