spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனது மருமகளுடன் ரீல்ஸ் செய்த விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர்

தனது மருமகளுடன் ரீல்ஸ் செய்த விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர்

-

- Advertisement -
தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், தனது மருமகளுடன் சேர்ந்து செய்துள்ள ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

we-r-hiring
எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் ஷோபா சந்திரசேகர். மொத்த கோலிவுட் திரையுலகமும் தளபதி என கொண்டாடும் விஜய்யின் அம்மாவும் இவராவார். இவர் தற்போது தனது கணவர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து துபாய்க்கு சென்றுள்ளார். அண்மையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது மாமா மற்றும் அத்தை என குறிப்பிட்டு பல்லவி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தி்ல வெளியான இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/C1jLNZ3ygjV/?utm_source=ig_embed&ig_rid=8a623933-1b10-4475-b273-f07182e22411

அப்போது தான் பலருக்கு தெரிய வந்தது அவர் நடிகர் விஜய்யின் மாமன் மகள் என்று. இந்நிலையில், தற்போது பல்லவி வினோத்குமார் தனது அத்தை ஷோபா சந்திரசேகரனுடன் பல ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தி்ல அவர் பதிவு செய்துள்ளார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஷோபா சந்திரசேகர் செய்த So Beautiful So Elegant Just Looking Like A Wow ரீல்ஸ் வீடியோ வைரலான நிலையில், தற்போது மீண்டும் ஒரு க்யூட் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

MUST READ