விஜய் பட நடிகைக்கு நீண்ட காலத்திற்கு பிறகு வெற்றி படம் கிடைத்துள்ளதால் உற்சாகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகை அமீஷா 2000 ஆம் ஆண்டில் ‘கஹோ நா… பியார் ஹை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் விஜய் உடன் புதிய கீதை படத்தில் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் சில வெற்றி படங்களில் நடித்த இவருக்கு அதையடுத்து பெரிதாக படங்கள் ஏதும் அமையவில்லை.
தற்போது, அமீஷா படேலுக்கு 47 வயதாகிறது. இந்நிலையில் சினிமாவில் அவர் மீண்டும் அழுத்தமான கம்பேக் கொடுத்துள்ளார். அமீஷா தற்போது கதர் 2 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளியான முதல் நாளிலேயே சுமார் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் அமோகமாக உள்ளது.
படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் வெற்றியால் அமீஷா உற்சாகமாக இருப்பதாகக் கூறபடுகிறது. எனவே இனிமேல் கிளாமராக நீச்சல் உடையில் படங்கள் வெளியிடுவதை நிறுத்திவிட்டு மீண்டும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.