Homeசெய்திகள்சினிமாவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரீ ரிலீஸ்

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரீ ரிலீஸ்

-

- Advertisement -
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். கைதி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய திரைப்படம் தான் மாஸ்டர். இத்திரைப்படத்தை, செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்தது. படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து மிரட்டியிருப்பார். மேலும், மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்திருப்பார்.

மேலும், மாஸ்டர் திரைப்படத்தில், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, மகேந்திரன், சாந்தனு பாக்யராஜ், நாசர், கௌரி கிஷன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வௌியாகி ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றது. படம் மட்டுமன்றி படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பெரிய ஹிட் அடித்தன.

இந்நிலையில், ஐரோப்பாவில் மாஸ்டர் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகிறது. 2021-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணாக ஐரோப்பாவில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. இதனால், மீண்டும் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்து ஹம்சினி நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய்யின் கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை குவித்த நிலையில், அடுத்து மாஸ்டர் படம் வெளியாவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

MUST READ