விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய வெப் சீரிஸ் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
விஜய் சேதுபதி தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆக உருவெடுத்துள்ளார். தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளிலும் களமிறங்கி அடித்து நொறுக்கி வருகிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான பார்சி(Farzi) வெப் சீரிஸ் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது தமிழில் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இந்த வெப் சீரிஸை இயக்குனர் மணிகண்டன் இயக்குகிறார். ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைகின்றனர்.
விஜய் சேதுபதி தமிழில் வெப் சீரிஸில் நடிப்பது இதுவே முதல் முறை. இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. அதில் இயக்குனர் மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்த சீரிஸுக்கு ராகேஷ் முருகேசன் இசையமைக்கிறார். சீரிஸில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழிலும் வெப் சீரிஸில் வெற்றி காணலாம் என்று விஜய் சேதுபதி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.