Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி நடிக்கும் புதிய பான் இந்தியா படம்.... டைட்டில் குறித்த அப்டேட்!

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய பான் இந்தியா படம்…. டைட்டில் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய பான் இந்திய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.விஜய் சேதுபதி நடிக்கும் புதிய பான் இந்தியா படம்.... டைட்டில் குறித்த அப்டேட்!

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.விஜய் சேதுபதி நடிக்கும் புதிய பான் இந்தியா படம்.... டைட்டில் குறித்த அப்டேட்! அதே சமயம் காந்தி டாக்ஸ், ட்ரெயின் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையில் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் விஜய் சேதுபதி. அதன்படி இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படமானது பான் இந்திய அளவில் உருவாகிறது. இதனைப் பூரி கனெக்ட்ஸ் நிறுவனமும், ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுகடன் இணைந்து ‘வாத்தி’ படத்தில் நடித்திருந்த சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தவிர நடிகை தபு இப்படத்தில் வில்லியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விஜய் சேதுபதி நடிக்கும் புதிய பான் இந்தியா படம்.... டைட்டில் குறித்த அப்டேட்! இந்நிலையில் தான் நேற்று (செப்டம்பர் 26) படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி (நாளை) இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகும் என அறிவித்திருந்தது. தற்போது கிடைத்த தகவலின் படி இந்த படத்திற்கு Slumdog என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ