விஜய் சேதுபதி நடிக்கும் புதிய வெப் தொடரின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் மகாராஜா எனும் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படம் தற்போது வரை 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஏஸ், ட்ரெயின், விடுதலை 2, காந்தி டாக்கீஸ் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார் விஜய் சேதுபதி. இதைத்தொடர்ந்து இவர், ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி, மணிகண்டன் கூட்டணி இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த வெப் தொடர் சம்பந்தமான புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த வெப் தொடருக்கு விண்ட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த வெப் தொடர் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் எனவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அப்டேட் கிடைத்துள்ளது.