Homeசெய்திகள்சினிமாபான் இந்திய அளவில் உருவாகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்!

பான் இந்திய அளவில் உருவாகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்!

-

- Advertisement -

விஜய் சேதுபதியின் அடுத்த படம் பான் இந்திய அளவில் உருவாக உள்ளது என தகவல் கிடைத்திருக்கிறது.பான் இந்திய அளவில் உருவாகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது காந்தி டாக்ஸ், ஏஸ், ட்ரெயின் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதே சமயம் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இன்னும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வரும் விஜய் சேதுபதி, மகேஷ் பாபுவின் போக்கிரி பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்திற்கு ‘பெக்கர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  பான் இந்திய அளவில் உருவாகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்!இந்த புதிய படத்தினை பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் தயாரிக்கிறார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஜூன் மாதத்தில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அடுத்தது இப்படமானது பான் இந்திய அளவில் உருவாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ