நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக மகாராஜா எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஓடிடியில் வெளியான பின்பும் மகாராஜா திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய் சேதுபதி ட்ரெயின் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருந்தார். அதன்படி இந்த படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கி வருகிறார். கலைப்புலி எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் படத்தை தயாரிக்கிறார். இந்த படமானது டார்க் ட்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படமானது ஒரே இரவில் ட்ரெயினில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தயாராகி வருகிறது. படத்தில் விஜய் சேதுபதி, வினய் ராய், பப்லு பிரித்விராஜ், சம்பத் ராஜ், கணேஷ் வெங்கட்ராமன், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்ட நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மிக தீவிரமாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்க்கும்போது நடிகர் விஜய் சேதுபதி அடர்ந்த தாடியுடன் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.