spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஜெயம் ரவி தான் நான் ரசித்த முதல் ஹீரோ'.... 'இறைவன்' ப்ரீ ரிலீஸ் விழாவில் விஜய்...

‘ஜெயம் ரவி தான் நான் ரசித்த முதல் ஹீரோ’…. ‘இறைவன்’ ப்ரீ ரிலீஸ் விழாவில் விஜய் சேதுபதி!

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இறைவன். இதனை ஐ அகமது இயக்கியுள்ளார். ஜெயம் ரவியுடன் இணைந்து நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் இறைவன் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜெயம் ரவியுடன் இணைந்து விஜய் சேதுபதி, வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்போது பேசிய விஜய் சேதுபதி, ” இறைவன் படத்தின் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அகமது, ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தின் தலைப்பும் அதைவிட பிடித்திருக்கிறது. நான் முதல் படம் நடிக்கும் போது 250 ரூபாய் தான் சம்பளம் கொடுத்தார்கள். ஜெயம் ரவியின் எம் குமரன் படத்தில் ஹீரோ அறிமுகக் காட்சியின் நான் கீழே நின்று கொண்டிருந்தேன். அந்த படத்திற்காக நான் 400 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். அப்போது ஜெயம் ரவியை பார்த்து நான் ரசித்தேன்.ஜெயம் ரவி தான் நான் பார்த்து ரசித்த முதல் ஹீரோ” என்று பேசியுள்ளார்.

MUST READ