- Advertisement -
வரும் 20-ம் தேதி கில்லி திரைப்படம் மறுவௌியீடு செய்யப்படும் நிலையில், முன்பதிவில் லட்சக்கணக்கில் பணம் கொட்டுகிறது.

நடிகர் விஜய்யின் மாஸ்டர் பீஸ் திரைப்படங்களில் கில்லி முதன்மையானது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு வசூலிலும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று கோலிவுட் அடையாளங்களில் ஒன்றாக மாறியது கில்லி திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குநர் தரணி இயக்கியிருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு இத்திரைப்படம் திரைக்கு வந்தது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார்.


வில்லன் வேடம் என்று எடுத்துக் கொண்டால் அதில் கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் ஏற்றுநடித்த முத்துப்பாண்டி கதாபாத்திரம் நிச்சயம் இடம்பெறும். படத்தில் அவர் பேசிய செல்லம் என்ற வசனம் இன்று வரை பிரபலம் என்றே சொல்லலாம். படத்தில் நகைச்சுவையாகவும் அதே சமயம் வில்லத்தனத்துடன் நடித்திருப்பார். இத்திரைப்படம் மட்டுமன்றி இதில் இடம்பெற்ற பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தன. அதில் அப்படிப்போடு, அர்ஜூன வில்லு ஆகிய பாடல்கள் இன்று வரை பலரின் விருப்பப் பாடல்கள் ஆகும்.



