spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்து புத்தாண்டு சர்ப்ரைஸ் கொடுக்கும் தளபதி 68 படக்குழு... வெளியானது புதிய போஸ்டர்...

அடுத்தடுத்து புத்தாண்டு சர்ப்ரைஸ் கொடுக்கும் தளபதி 68 படக்குழு… வெளியானது புதிய போஸ்டர்…

-

- Advertisement -
விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது.

ரசிகர்களால் தளபதி என்று அன்புடன் கொண்டாடப்படும் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்து வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

we-r-hiring
இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழு அமெரிக்கா சென்றது. அங்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்து சென்னை திரும்பியது. இதைத் தொடர்ந்து இத்தாலியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது மீண்டும் படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

இப்படத்திற்கு the Greatest Of All Time என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது தோற்றம் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

MUST READ