spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய்யின் துப்பாக்கி திரைப்படம்... நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரல்....

விஜய்யின் துப்பாக்கி திரைப்படம்… நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரல்….

-

- Advertisement -
அண்மைக் காலமாக ஹிட் திரைப்படங்கள் அனைத்தும் மீண்டும் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. விஜய் நடிப்பில் ஹிட் அடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தரணி இயக்கியிருந்த இத்திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்ட போதிலும், படம் வசூலை குவித்தது. இதைத் தொடர்ந்து அஜித் பிறந்தநாள் போது, பில்லா, மங்காத்தா ஆகிய படங்களும் மறுவெளியீடு செய்யப்பட்டன. தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் ஹிட் அடித்த துப்பாக்கி மற்றும் போக்கிரி ஆகிய திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகின்றன.

இதோடு விஜய் நடித்த வில்லு மற்றும் சச்சின் ஆகிய திரைப்படங்களும் ரி ரிலீஸ் செய்யப்படுவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டன. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரைப்படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து மறுவெளியீடு செய்யப்படுகின்றன. விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துப்பாக்கி. இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படம் ஏகபோக வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.

https://x.com/i/status/1799690567112356182

இந்நிலையில் துப்பாக்கி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மற்ற நடிகர் நடிகைகளுடன் விஜய் இந்தியில் வசனம் பேசி சிரிக்கும் இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ