spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் டிவி ரக்ஷன் நடிக்கும் 'மறக்குமா நெஞ்சம்' .... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் டிவி ரக்ஷன் நடிக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ …. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

விஜய் டிவி ரக்ஷன் நடிக்கும் 'மறக்குமா நெஞ்சம்' .... ரிலீஸ் தேதி அறிவிப்பு!சின்னத்திரையில் பணியாற்றியவர்கள் பலர் வெள்ளித்திரைக்கு பயணம் சென்று முத்திரை பதித்து வருகின்றனர். அந்த வகையில் தொகுப்பாளராக பணிபுரிந்த
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் கவின் டாடா படத்தின் மூலம் பல்வேறு ரசிகர்களை கவர்ந்து, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். ரியோ ராஜ், சுரேஷ் ரவி போன்றவர்கள் தற்போது சினிமாவிலும் கால் தடம் பதித்து அடுத்தடுத்த நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியின் மூலம்
பிரபலமானவர் ரக்ஷன். இவர் ஏற்கனவே துல்கர் சல்மான் உடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதே சமயம் ரஜினியுடன் இணைந்து வேட்டையன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.விஜய் டிவி ரக்ஷன் நடிக்கும் 'மறக்குமா நெஞ்சம்' .... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

we-r-hiring

இதற்கிடையில் மறக்குமா நெஞ்சம் எனும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரக்ஷன். இதில் ரக்சன் உடன் இணைந்து மலினா, தீனா, முனிஷ்காந்த், ப்ராங்க்டர் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை யோகேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். இதனை ஃபிலியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் குவியம் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய சச்சின் வாரியர் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ