- Advertisement -
பிரபல சின்னத்திரை நடிகரும், பல படங்களில் துணை நடிகராகவும் உதவி இயக்குனராகவும், இயக்குனராகவும் பணியாற்றியுள்ள நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இவரின் இறப்பிற்கு திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில், “பிரபல நடிகரும், இயக்குநனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.அவரது திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவருடைய இழப்பு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்” என்று பதிவிட்டுள்ளார்.


