Homeசெய்திகள்சினிமாரஜினி முருகன் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜயகாந்த் மகன்!

ரஜினி முருகன் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜயகாந்த் மகன்!

-

- Advertisement -

இயக்குனர் பொன்ராம் ஆரம்பத்தில் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அதன் பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். ரஜினி முருகன் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜயகாந்த் மகன்! இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் என்ற வெற்றி படத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்தபடியாக இவர் இயக்கியிருந்த சிவகார்த்திகேயனின் சீம ராஜா, விஜய் சேதுபதியின் டிஎஸ்பி போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம், மீண்டும் இதை விஜய் சேதுபதியிடம் சென்று அடுத்த படம் சம்பந்தமாக பேசியிருக்கிறார். அப்போது விஜய் சேதுபதி, வெற்றிமாறன் கதையில் நான் நடிக்க நீங்கள் படம் இயக்கங்கள் என்று கூற, மேலும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவே இல்லையாம். ஆகவே அடுத்ததாக பொன்ராம், நடிகர் சூரியிடம் சென்று பேசியிருக்கிறார். சூரி தற்போது பல படங்களில் கமிட்டாகி இருப்பதால் அவரும் மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.ரஜினி முருகன் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜயகாந்த் மகன்! இந்நிலையில் அடுத்தபடியாக விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியனிடம் தனது கதையை சொல்லி இருக்கிறார் பொன்ராம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. ஆகவே பொன்ராமின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மீண்டும் பொன்ராம் தரமான கம்பேக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ