spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅரசியல் நெடி மிகுந்த எலக்சன்... படத்தின் முன்னோட்டம் வெளியீடு...

அரசியல் நெடி மிகுந்த எலக்சன்… படத்தின் முன்னோட்டம் வெளியீடு…

-

- Advertisement -
விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் எலக்சன் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் எழுத்தாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராகி, இன்று வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக தன்னை முன்னிறுத்தி இருக்கும் நபர் விஜய்குமார். அவரது முதல் படமாக உறியடி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் விஜய்குமார். 2016-ம் ஆண்டு வெளியான உறியடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உறியடி 2-ம் பாகம் வெளியானது. நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்து இருந்தார்.

we-r-hiring
உறியடி படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து விஜய் குமார் நடித்த திரைப்படம் ஃபைட் கிளப். இப்படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரித்து இருந்தார். இது தான் அவர் தயாரித்த முதல் படமாகும். ஆனால், கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, விஜய் குமார் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் எலக்சன். இப்படத்தை தமிழ் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பா ரஞ்சித் தயாரித்த சேத்துமான் படத்தை இயக்கியவர் ஆவார். இது அவர் இயக்கும் இரண்டாவது திரைப்படமாகும்.

இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது எலக்சன் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இது, இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

MUST READ