மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய்தத், கௌதம், வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் மிகப் பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ளது. படத்தின் நான் ரெடி எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். மேலும் இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கூறியுள்ளார். அதனால் ட்ரைலரும் அந்த விழாவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCU விற்கு கீழ் வருமா என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் ட்ரெய்லர் வெளியாகும் தகவல் கிடைத்துள்ளதால் ரசிகர்கள் பலரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.