நடிகர் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். அதேசமயம் படப்பிடிப்பு நடக்கும்போது ரசிகர்களை சந்தித்து தனது அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார் விஜய். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க திரைத்துறையில் பல படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் விஜயின் கில்லி திரைப்படமும் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இந்த இந்த படம் 2004ல் வெளியான சமயத்தில் எவ்வளவு ஆதரவு கிடைத்ததோ அதே அளவு ஆதரவை இத்தனை வருடங்கள் கழித்தும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். இதை ரீ ரிலீஸ் செய்யப்படும் தியேட்டர்களில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் கில்லி பட பாடலுக்கு குத்தாட்டம் போடுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாகவும் இது தொடர்பான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருவதாகவும் புதிய தகவல் கிடைத்துள்ளது. சச்சின் திரைப்படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் காமெடிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இடம்பெற்ற பாடல்களும் காமெடிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஏற்கனவே விஜய் நடித்த வில்லு திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.