spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்... இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்...

விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்… இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்…

-

- Advertisement -
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகில் நூற்றுக்கணக்கில் இயக்குநர்கள் உள்ளனர். அவற்றில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் சிலர் முன்னணி இயக்குநர்களாக உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க நபர் மிஷ்கின். டாப் இயக்குநராக வலம் வரும் அவர், மற்ற இயக்குநர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்க முக்கிய காரணம் அவரது திரைப்படங்கள்தான். காதல், காமெடி என வெறும் கமர்ஷியல் படங்களை இயக்காமல் தனக்கென தனி ஸ்டைலில் ராவாக படம் இயக்குவதில் கை தேர்ந்தவர் மிஷ்கின்.

we-r-hiring
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, சைக்கோ, பிசாசு ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரின் நடிப்பில் ‘பிசாசு 2’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், விஜய் சேதுபதியை வைத்து மிஷ்கின் இயக்கி இருக்கும் புதிய திரைப்படம் ட்ரெயின். இந்த புதிய படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.

MUST READ