Homeசெய்திகள்சினிமா'2018' பட இயக்குனருடன் விக்ரம் இணையும் புதிய படம்..... கதாநாயகி குறித்த அப்டேட்!

‘2018’ பட இயக்குனருடன் விக்ரம் இணையும் புதிய படம்….. கதாநாயகி குறித்த அப்டேட்!

-

விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் நிறைவு செய்துள்ளார்.

விக்ரம், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியின் துருவ நட்சத்திரம் திரைப்படமும் நிறைவடைந்து தற்போது தயாரிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் தனது அடுத்த பாடத்திற்காக தயாராகி வருகிறார். விக்ரம் தற்போது தனது 62 ஆவது படத்தை மலையாள இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

ஜூட் ஆந்தனி ஜோசப், டோவினோ தாமஸ் நடிப்பில் 2018 படத்தை இயக்கியவர். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இதை தொடர்ந்து இவர் லைக்கா நிறுவனத்துடன் கைகோர்க்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி இவர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இவர்களின் இந்த கூட்டணியில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. நிவின் பாலியும் இதில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது ஆனால் அது சம்பந்தமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் மற்றொரு அப்டேட்டாக, இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ