பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு விக்ரம், பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
தங்கலான் படத்திற்கு முன்னதாகவே விக்ரம், துருவ நட்சத்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் ,ரித்து வர்மா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் விக்ரம் மூன்று வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது துருவா, ஜோஸ்வா, ஜான் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை ஒன்றாக என்டர்டயின் மென்ட், கொண்டாடுவோம் என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், அதை தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு 2 வருடங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் ஒரு மனம் என்ற ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியானது.
மேலும் படம் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்ததால் இந்த படம் குறித்து சமீபத்தில் எந்த தகவலும் வெளிவரவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடலை அடுத்த வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், ஜூலை மாத கடைசியில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.