Homeசெய்திகள்சினிமாமண்டேலா பட இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் விக்ரம்.... ஷூட்டிங் எப்போது தெரியுமா?

மண்டேலா பட இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் விக்ரம்…. ஷூட்டிங் எப்போது தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் விக்ரம், மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்று புதிய தகவல் வெளியாக வருகிறது.மண்டேலா பட இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் விக்ரம்.... ஷூட்டிங் எப்போது தெரியுமா?கடந்த 2021 ஆம் ஆண்டு யோகி பாபு நடிப்பில் மண்டேலா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மடோன் அஸ்வின், சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது மடோன் அஸ்வின், நடிகர் விக்ரமுடன் கூட்டணி அமைக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகி வருகிறது. அதாவது நடிகர் விக்ரம், தங்கலான் படத்திற்கு பிறகு அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனிடம், நடிகர் விக்ரம் கதை கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மண்டேலா பட இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் விக்ரம்.... ஷூட்டிங் எப்போது தெரியுமா?இதற்கிடையில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் விக்ரம். இந்த படம் விக்ரமின் 63வது படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் இதனை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ