spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிக்ரம் பிரபுவின் 'இறுகப்பற்று' படம் குறித்த முக்கிய அப்டேட்!

விக்ரம் பிரபுவின் ‘இறுகப்பற்று’ படம் குறித்த முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

இறுகப்பற்று திரைப்படத்தின் கான்செப்ட் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் பாயும் ஒளி நீ எனக்கு எனும் திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து விக்ரம் பிரபு ‘இறுகப்பற்று’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் விதார்த், ஸ்ரீ, ஷ்ரதா ஸ்ரீநாத், அபர்னதி, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் யுவராஜ் தயாளன் எழுதி, இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜஸ்டின் பிரபாகரன் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. கோகுல் பினாய் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

we-r-hiring

சமீபத்தில் இருகப்பற்று திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் கான்செப்ட் டீசர் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ