விக்ரம் பிரபு நடிக்கும் இறுகப்பற்று திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
விக்ரம் பிரபு பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்திற்கு பிறகு இறுகப்பற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து விதார்த், ஸ்ரீ, ஷ்ரதா ஸ்ரீநாத், அபர்னதி, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் யுவராஜ் தயாளன் எழுதி இயக்குகிறார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்தபடி இறுகப்பற்று ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மூன்று ஜோடிகள் காட்டப்படுகிறது. விக்ரம் பிரபு மற்றும் ஷ்ரதா ஸ்ரீநாத் ஒரு ஜோடியாகவும், விதார்த் மற்றும் அபர்னதி ஒரு ஜோடியாகவும், ஸ்ரீ மற்றும் சானியா ஐயப்பன் ஒரு ஜோடியாகவும் காட்டப்படுகின்றனர்.
இதன் மூலம் இந்த படத்தில் இவர்களின் காதல் கதைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் குறித்து பேசும் படம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.