- Advertisement -
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விக்ராந்த். இவர் தளபதி விஜய்யின் சகோதரரும் ஆவார். தமிழில் 2005-ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே கவனமும் ஈர்த்தார். இதையடுத்து முத்துக்கு முத்தாக திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குணச்சித்திர வேடமாக இருந்தாலும், படத்தில் விக்ராந்தின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. தொடர்ந்து கோரிப்பாளையம், விஷால் நடித்த பாண்டியநாடு, விஜய் சேதுபதி நடித்த கவண், உதயநிதி ஸ்டாலின் நடித்த கெத்து ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடித்திருந்தார்

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் இத்திரைப்படம் வெளியாக உள்ளது


